யாழ். மல்லாகம் சந்தியில் பட்டா - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! (படங்கள்)

யாழ்.மல்லாகம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மல்லாகம் சந்தியில் பட்டா ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கில் ஒன்றும் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயனித்த பன்னாலையை சேர்ந்த 37 வயதுடைய இரத்தினசிங்கம் ராசகாந்தன் என்பவரே காயமடைந்த நிலையில்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post