
பரிஸ் - பொன்டியில் வசிக்கும் 15 வயதான சானுக்கா ஜெயமன் என்ற சிறுமியே இந்த பெருமையை பெற்றுள்ளார்.
மன்னாரை சேர்ந்த குடும்பத்தை பின்புலமாக கொண்ட சானுக்கா Roll ball போட்டியில் பிரான்ஸ் அணியில் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதற்கமைய கடந்த 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரையில் நடைபெற்று சுற்றுத்தொடரில் பிரான்ஸ் அணி சார்பாக அவர் விளையாடியுள்ளார்.
மன்னாரில் வசித்த காலத்தில் முறையான பயிற்சிகளை பெற்ற சானுக்கா, பிரான்ஸிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக பிரான்ஸ் வந்து குறுகிய காலத்திற்குள் France Roll ball அணியொன்றில் விளையாடும் வாய்ப்பினை அவர் பெற்றுள்ளார்.