ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிரடி தீர்மானம்!


நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்க சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர இதனைத் தெரித்துள்ளார்.

இதேவேளை,ஆளுங்கட்சி குழுவினர் பங்குபற்றலுடன் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் தலைமையில் இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது 132 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்தே, சுதந்திரக்கட்சி தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது.

இதேவேளை, லசந்த அலகியவன்ன, துமிந்த திசாநாயக்க, பிரியங்கர ஜயரத்ன ஆகியோர் இராஜாங்க அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
Previous Post Next Post