யாழில் விபத்து! கடலுக்குள் பாய்ந்த கார்!! (படங்கள்)

வல்லை பாலத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் கார் ஒன்று கடலுக்குள் பாய்ந்தது. எனினும் தெய்வாதீனமாக காரை செலுத்தியவர்கள் காயங்கள் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.

நேற்று (ஏப்ரல் 4) திங்கள்கிழமை பிற்பகல் மூன்று முப்பது மணியளவில் வடமராட்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பருத்தித்துறை வீதியால் பயணித்த கார் ஒன்றின் சாரதி தனக்கு அலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து அவரது காரை ஓரமாக நிறுத்தி அந்த அழைப்புக்கு பதில் அளித்துள்ளார்.

அவ்வேளையில் அந்த காருக்கு பின்புறமாக வந்த மருத்துவரினால் செலுத்தப்பட்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் மோதி அங்கிருந்து பாலத்துக்கு கீழே நீரினுள் விழுந்தது.

இரண்டு கார்களும் பலத்த சேதம் அடைந்த போதும் தெய்வாதீனமாக காரை செலுத்தியவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.

Previous Post Next Post