பிரான்ஸிலிருந்து முல்லைத்தீவுக்கு குடும்பத்துடன் வந்த 15 வயதுச் சிறுமி கர்*ப்பம்!

கடந்த வற்றாப்பளை திருவிழா காலத்தின் போது தமது சொந்த இடமான முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் வந்து குடும்பமாக தங்கியிருந்த பிரான்ஸ் புலம்பெயர் தம்பதிகளின் 15 வயது சிறுமி தற்போது பிரான்சில் 6 மாத கர்ப்*பமாகவுள்ளதாக தெரியவருகின்றது. கடந்த ஒக்ரோபர் மாத தொடக்கப் பகுதியில் குறித்த சிறுமி பிரான்சில் பாடசாலையில் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவர் அங்குள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் கர்ப்*பமடைந்துள்ளது வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பெற்றோர் மற்றும் பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது பிரான்சிலிருந்து முல்லைத்தீவில் தங்கியிருந்த காலப்பகுதியில் தமது வீட்டு வந்து சென்ற புகைப்பபடம் எடுக்கும் ஒருவரே காரணம் என கூறியுள்ளார். 

குறித்த சிறுமியும் அவளது தாயார் மற்றும் முல்லைத்தீவில் வாழ்ந்து வந்த அவர்களது சில உறவுகளும் குறித்த சிறுமியின் பூப்புனிதநீராட்டு விழாவின் தொடர்ச்சியான சில காட்சிகளை எடுப்பதற்காக இரணைமடு மற்றும் அப்பகுதியில் உள்ள குளங்கள் மற்றும் அழகிய இடங்களுக்கு புகைப்பட ஸ்ருடியோவின் வாகனத்திலேயே பயணித்துள்ளனர்.

அந் நேரத்திலேயே அந்த வாகனத்தில் வந்த ஸ்ருடியோவில் வேலை செய்யும் ஒருவனுடன் சிறுமிக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் சிறுமியும் அவளது தாயார் உட்பட ஒரு சிலரும் குறித்த ஸ்ருடியோவில் வேலை செய்யும் சம்மந்தப்பட்டவுடன் முல்லைத்தீவு நாயாறு கடற்கரை மற்றும் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள சிறு தீவு என்பவற்றுக்கு சென்று படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளார்கள். 

அந் நேரத்தில் முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் உள்ள விடுதியில் அவர்கள் தங்கியுள்ளதாகவும் அங்கு வைத்தே குறித்த சிறுமியுடன் புகைப்படப்பிடிப்பாளன் உறவு கொண்டதாகவும் சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தற்போது சிறுமியின் பெற்றோர் முல்லைத்தீவுக்கு வந்துள்ளதுடன் சிறுமியை கர்ப்*பமாக்கிய புகைப்படப்பிடிப்பாளனை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அவன் வேலை செய்த ஸ்ரூடியோவுக்கு அவன் தற்போது வருவதில்லை எனவும் குறித்த ஸ்ரூடியோவில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் அவனைப் போன்றவர்களை தொலைபேசியில் அழைத்து தாம் படப்பிடிப்பை மேற்கொள்வதாகவும் ஸ்ரூடியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசாரிடம் முறையிட்டு அவனைக் கைது செய்யும் நடவடிக்கையில் பிரான்ஸ் தம்பதியினிர் ஈடுபட்டுள்ளார்கள்.

கர்ப்*பமாக்கியவன் இளைஞனா அல்லது குடும்பஸ்தனா என்பது கூட சிறுமிக்கு தெரியாது என்றும் ஸ்ரூடியோவில் விசாரணை செய்த பின்னரே அவனது புகைப்படங்கள் மற்றும் பெயர் விபரங்கள் என்பவற்றை பெற்றோர் பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. 

சிறுமியைக் கர்ப்பமாக்கியவன் 27 வயதான திருமணமாகாத வவுனியாவைச் சொந்த இடமாகக் கொண்டவன் என்பது மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது இரகசியமாக பெற்றோர் தேடுதல் நடாத்துகின்றார்கள். அவர்களால் கண்டு பிடிக்க முடியாவிட்டால் அவனது பெயர் விபரங்கள், புகைப்படங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Previous Post Next Post