ஏ-9 பிரதான வீதியில் திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த கழிவுநீர்க் கால்வாய்க்குள் பாய்ந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்து காலை இன்று 27 இடம்பெற்றுள்ளது. காரில் பயணம் செய்தவர்கள் சிறு சிறு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்கள்.

