கொரோனா அறிகுறி! முன்னாள் எம்.பி.சிறிதரன் வைத்தியசாலையில் அனுமதி!

இரண்டாம் இணைப்பு
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  வழமையாக மேற்கொள்ளும் சாதாரண இரத்த பரிசோதனை செய்வதற்காக இன்று காலை வைத்தியசாலை சென்றிருந்தார்.

அத்துடன் அண்மையில் ஐ.நாவில் நடைபெற்ற இலங்கை தொடர்பான மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பங்குபற்றி மார்ச் 2ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியிருந்ததால்  இரத்த பரிசோதனையின் தொடர்ச்சியாக கொரோனா நோய் தொடர்பான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைகள் முழுமையாக நிறைவடைந்து எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  வீடு திரும்பிவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலாம் இணைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கோரோனா சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து அவர் கோரோனா பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு நேற்றைய தினத்தில் இருந்து திடீரென ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் தொண்டை நோ காரணமாக இன்று கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அவருக்கு கோரானா தொற்று அறிகுறி உள்ளமையால் அம்புலன்ஸ் மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று முற்பகல் அனுவைக்கப்பட்டார்.

“அவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கோரோனா சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது. அவருக்கு உரிய முதலாம் கட்ட பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது அதன் பின்னரே அவருக்கு கோரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பது பற்றி அறிவிக்கப்படும்” என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post