யாழ்.கரவெட்டியில் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு நடத்திய பாடசாலை மூடல்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறி தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பிரேத்தியேக வகுப்பு நடத்திய பாடசாலை மூடப்பட்டதுடன் அதிபர், ஆசிரியர் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய வதிரி திரு இருதயக் கல்லூரியே இவ்வாறு இன்று தொடக்கம் 20ஆம் திகதிவரை மூடப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதார பரிசோதகரின் அனுமதியைப் பெறாது தரம் 5 புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பாடசாலையில் இன்று பிரத்தியேக வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை மீறி வகுப்பு நடத்தப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொதுச் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர், மாணவர்களை வீடுகளுக்கு அனுப்பிவைத்தனர்.

பாடசாலையின் அதிபர், வகுப்பு நடத்திய ஆசிரியரை அவர்களது வீடுகளில் சுயதனிமைப்படுத்தியதுடன், பாடசாலையை மூடி அறிவித்தல் ஒட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post