மரு அருந்திய கணவனும் மனைவியும்! போதை தலைக்கேறியதால் கணவனைக் கொலை செய்த மனைவி!!

கோவையில் குடிபோதையில் மனைவி தனது கணவனை அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காக்காபாளையம் மற்ற பகுதிக்கு அருகில் உள்ள நடுவனேரியை சேர்ந்தவர் அண்ணாமலை. 35 வயதாகும் இவர் 32 வயதாகும் தனது மனைவி பிரியாவுடன் கோவை செட்டிபாளையம் அருகே உள்ள பெரியகுயிலி என்ற பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வந்தார்.

கணவன் மனைவி இருவருமே குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். சம்பவம் நடந்த அன்று கணவன் மனைவி இருவரும் நன்றாக குடித்து விட்டு வீட்டில் இருந்தனர். போதை அதிகமானதால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதனால் கோபம் அடைந்த மனைவி பிரியா தனது கணவன் அண்ணாமலையை கீழே தள்ளி விட்டுள்ளார். இதனால் போதை தலைக்கேறியதால் அண்ணாமலை மயங்கிக் கீழே விழுந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பிரியா அருகில் இருந்த கல்லை எடுத்து கீழே மயங்கி இருந்த அண்ணாமலையின் முகம் மற்றும் மார்பு மீது கோபம் தீரும் வரை நடித்துள்ளார். இதனால் அவரது கணவன் அண்ணாமலை துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இந் நிலையில் என்ன செய்வதென்று அறியாமல் பதறிய பிரியா சேலத்தில் உள்ள ஜல்லி கோட்டையில் உள்ள தனது அக்காள் கணவர் செல்வராஜுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

தகவலறிந்த செல்வராஜ் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். அம்புலன்ஸ் டிரைவரிடம் பிரியா தனது கணவர் தடுக்கி விழுந்து இறந்து விட்டதாகவும் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனால் உயிரிழந்த அண்ணாமலையின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அண்ணாமலையின் உடலை பரிசோதித்த பின்னர் நடந்தது கொலை என்பதை கண்டறிந்தனர்.

அத்துடன் அங்கிருந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் காரணமாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பிரியா மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் செட்டிபாளையத்தில் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது போலீசாரிடம் பிரியா தனது கணவர் கீழே தடுக்கி விழுந்து இறந்து விட்டார் என கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் பிரியா குடிபோதையில் தனது கணவரை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக பிரியா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த செல்வராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post