முகக் கவசங்கள் அணியாதோர் தனிமைப்படுத்தலில்! நாளை முதல் நடைமுறைக்கு!!

“பொது இடங்களில் தனிநபர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். மீறுவோர் 14 நாள்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்படுவார்கள்” என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.


கோவிட் -19 நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த கடந்த 3 மாதங்களில் காணப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் வாரங்களில் தொடரப்பட வேண்டும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றத் தவறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post