ஈழத் தமிழரைக் கௌரவித்த பிரித்தானிய மக்கள்! அன்பளிப்பும் வழங்கி வைப்பு!! (வீடியோ)

பிரித்தானிய மக்களால் ஈழத் தமிழரான ரஜீவன் என்பவர் கௌரவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு அன்பளிப்பாகப் பரிசில்களும், பணமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்திருந்தது.


இந் நிலையில் பிரித்தானியாவில் வர்த்தக நிலையம் நடாத்தும் ரஜீவன், பிரித்தானிய அரசினதும், சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களை முழுமையாகப் பின்பற்றி தனது வர்த்தக நிலையத்தை நடத்தியதுடன், வர்த்தக நிலையத்தை அரசால் நிர்ணயித்த நேரத்தில் திறந்து, மூடியுள்ளார்.

அத்துடன் தனது வர்த்தக நிலையத்தில் எவ்வித விலை ஏற்றத்தையும் செய்யாது வாடிக்கையாளர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு செயற்பட்டுள்ளார்.


இதனாலேயே அப் பகுதியைச் சேர்ந்த மக்கள் இவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், பரிசுப் பொருட்களுடன் ஆயிரத்து 250 பவுண் பணத்தைக் காசோலையாகவும் வழங்கி வைத்துள்ளனர்.
Previous Post Next Post