பிரான்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!


பிரான்ஸில் நாடளாவிய ரீதியில் வைரஸ் தடுப்பூசி ஏற்றும் மாபெரும் நடவடிக்கை அடுத்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதகாலப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ளது.

'கோவிட் 19' வைரஸுக்கான தடுப்பூசி முதற்கட்டமாக நோயாளிகள் மற்றும் பலவீனமானவர்களுக்குச் செலுத்தப்படும். இரண்டாவது கட்டமாக நாட்டு மக்கள் அனைவருக்குமான பொதுவான தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படும்.

அதிபர் எமானுவல் மக்ரோன் பெல்ஜியத்தில் இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட சமயம் இத்த கவலை வெளியிட்டார்.

"ஜரோப்பிய சுகாதார அதிகார சபையின் அனுமதி கிடைத்ததும் முதலாவது கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி இம்மாத இறுதியில் அல்லது ஜனவரியில் தொடங்கப்படும். அதன் பின்னர் நாட்டுக்குத் தேவையான தடுப்பூசி புட்டிகள் முழுவதும் இங்கு வந்து சேர்ந்தவுடன் அனைவருக்கும் ஊசி செலுத்தும் பெருந் திட்டம் ஆரம்பமாகும். "

" தடுப்பூசி ஏற்றுவது மக்களைக் கட்டாயப்படுத்தும் ஒர் உத்தி அல்ல. ஆனால் நம்பிக்கையானதும் வெளிப்படையானதுமான ஒரு திட்டமாக அது இருக்கும்"
-இவ்வாறு மக்ரோன் அங்கு மேலும் தெரிவித்தார்.

ஜரோப்பிய ஒன்றியத்துக்கான தடுப்பூசி மொத்தமாகக் கிடைத்ததும் உறுப்பு நாடுகளின் சனத்தொகைக்கு ஏற்ப அவை பகிரப்படும். தடுப்பூசியைப் பங்கு போட்டுக் கொள்வதில் நாடுகளிடையே எந்தவித மோதலும் கிடையாது - என்றும் அவர் கூறினார்.

இதேவேளை நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஜந்து கட்டங்களாக முன்னெடுக்குமாறு பிரான்ஸின் தேசிய சுகாதார அதிகார சபை அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
Previous Post Next Post