சீரற்ற காலநிலை! வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கும் விடுமுறை!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமையும் மறுநாள் வெள்ளிக்கிழமையும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை நாளை தொடக்கம் விடப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post