கூட்டமைப்பு வேட்பாளரின் வித்தியாசமான தேர்தல் விளம்பரம்! (படங்கள்)

தேர்தல் வந்து விட்டால் என்ன செய்தாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்றே வேட்பாளர்களின் குறிக்கோளாக இருக்கும்.

அதிலும் சிலர் இல்லாத பொல்லாத பொய்களைக் கூறி மக்களைத் திசைதிருப்பி தங்களின் சுத்துமாத்துக்களால் வெற்றி பெற்று விடுவார்கள்.

அதுபோல் சிலர் தாங்கள் செய்யும் விளம்பரங்களை வித்தியாசமான முறையில், மக்களைக் கவருகின்ற விதத்தில் செய்து வெற்றி பெற்று விடுவார்கள்.அந்தவகையில்தான், வவுனியா மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் இலக்கம் 5 இல் களமிறங்கியுள்ள முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வித்தியாசமான முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் விற்கப்படும் குளர்பான வகைகள் உள்ளிட்ட பல உணவுப்பொதிகளில் தனது ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.

குளிர்பான போத்தல்கள்இ மற்றும் பானங்களில் லிங்கநாதனின் படம் பொறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.Previous Post Next Post