காங்கேசன்துறை கடற்படை முகாமில் சிப்பாய்கள் இருவருக்கு கொரோனா!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் சிப்பாய்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சிப்பாய்கள் இருவரும் கடமையாற்றிய கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்மூலம் மினுவாங்கொட ஊழியர்கள் இடையே ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலால் 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post