கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (நவ. 24) செவ்வாய்க்கிழமை தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கோரோனா தொற்றாளர் ஒருவர் இன்று கண்டறியப்பட்ட நிலையில் சுகாதாரத் துறையின் கோரிக்கைக்கு அமைய இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 72 வயதுடைய வயோதிபர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

“கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடை நடத்தும் வியாபாரி ஒருவருக்கு நேற்று காய்ச்சல் என்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கோரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.

அத்துடன், அவரது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டது. அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் கிளிநொச்சியில் அண்மைய நாள்களில் நடமாடிய இடங்கள் மற்றும் தொடர்புகொண்டவர்களைக் கண்டறிவதில் சிக்கல் உண்டு. அதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதனால் அவரது கடைக்கு அண்மையாக உள்ள கடைகளை மூடி தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Previous Post Next Post