நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெயில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனப் பொருள் கலக்கப்பட்டுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதேநேரம் பல இடங்களில் குறித்த தேங்காய் எண்ணெய்கள் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டும் வருகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் தொடர்பில் ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை பதிவு ஒன்றைத் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
இப் பதிவின் மூலம் மக்கள் விழிப்படைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அவரின் முழுமையான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.