பிரான்ஸ் Créteil மருத்துவமனையில் புதிய திரவு கொரோனா அடையாளம்!


பிரான்ஸில் பரவிக் கொண்டிருக்கும் புதிய வைரஸ் திரிபு ஒன்றின் மாதிரியை ஆய்வாளர்கள் பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் கண்டுபிடித்துள்ளனர்.

பாரிஸ் புறநகரான கிறித்தையில் (Créteil Val-de-Marne) உள்ள Henri-Mondor மருத் துவமனையில் புதிய திரிபு கண்டறியப் பட்டிருப்பதாக மருத்துவமனைகளின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

அந்த மருத்துவமனையின் பெயரிலேயே "Henri-Mondor variant" என அழைக்கப்படு கின்ற அந்தத் திரிபு ஏற்கனவே பரவிவரு கின்ற பல திரிபுகளைப்போன்றே வேகமாகத் தொற்றும் தன்மை வாய்ந்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள் ளனர். 

அதன் தடுப்பூசிகளை எதிர்க்கும் திறனை அறிவதற்காக தொடர்ச்சியான கண்காணிப்புப் பரிசோதனைகள் நடை பெற்று வருகின்றன.

இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா, பிறேசில் உட்பட பல வெளிநாட்டுப் பெயர் கொண்ட திரிபுகளும், உள்நாட்டில் கண்டறியப்பட்ட Breton, Alsatian பிராந்திய திரிபுகளும் ஏற்கனவே பரவி வருகின்றன. 

தற்போது கிறித்தையில் கண்டறியப்பட்ட திரிபுஇந்தியாவில் தோன்றிய ஒன்றுக்கு மேற்பட்ட மரபுகளைக் கொண்ட புதிய தலைமுறை திரிபு போன்று இரட்டைத் தன்மை ("double mutant variant") கொண் டதா என்பதைக் கண்டறிய மேலும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

பொதுவாகவே வைரஸ் இனங்கள் நீண்ட காலம், மிக அதிக மக்கள் தொகையினரி டையே பரவுகின்ற போது அவை தங்க ளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மரபு மாற்றங்களை எடுக்கின்றன. இது வழக்கமான ஒர் உயிரியல் செயற்பாடு ஆகும்.

குமாரதாஸன். பாரிஸ்.
Previous Post Next Post