நல்லூர் கந்தனின் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது! (வீடியோ)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

நாட்டில் நடைமுறையில் உள்ள கோவிட்-19 நோய்த்தொற்று சுகாதார கட்டுப்பாடுகளுக்கு அமைய சிவாச்சாரியார்கள் மற்றும் தொண்டர்கள் மட்டும் ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தொடர்ந்து 25 நாள்களும் ஆலய வழிபாடுகளைக் கொண்டு செல்வர்.

உள்வீதியில் மட்டுமே திருவிழாக்களை நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வீட்டிலிருந்தே நல்லூர்க் கந்தனின் திருவிழாவை நேரலையில் தரிசிக்க ஆலய தர்மகர்த்தாவினால் நேரலை ஒளிபரப்பு சமூக ஊடகங்களில் காண்பிக்கப்படுகிறது.

நல்லூர் ஆலய முன்பாக பருத்தித்துறை வீதியில் பக்தர்கள் ஒன்றுகூடி நல்லூர்க் கந்தனை தரிசித்தனர்.

நல்லூர் ஆலய முன்வாசலில் பொலிஸாரின் பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில் அதற்கு அடியவர்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அதனால் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருவிழா தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளது.

Previous Post Next Post