யாழில் இந்திய துணைத்தூதர் அலுவலகம் முன் இனந்தெரியாதோர் போத்தலால் தாக்குதல்! (வீடியோ)

யாழ்.மருதடி வீதியில் உள்ள யாழ்.இந்திய துணை தூதரக அலுவலகத்தின் மீது நேற்றிரவு இனம் தெரியாத நபர்கள் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் இந்திய துணை தூதரக அலுவலகத்திற்கு முன்னால் நேற்று இரவு 9 மணி அளவில் கண்ணாடி போத்தலால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று காலை யாழ். இந்திய துணை தூதுவரினால் யாழ்.பொலிசாருக்கு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது யாழ்ப்பாண பொலிசார் மற்றும் தடவியல் பொலிசார் விரைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post