“செத்தாலும் இலங்கைக்குப் போக மாட்டோம்”: கதறும் இலங்கையர்கள்! துன்புறுத்தும் வியட்நாம் அதிகாரிகள்!! (வீடியோ)

பிலிப்பைன்ஸ் கடலில் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் 303 சட்டவிரோத புகழிட கோரிக்கையாளர்களான இலங்கையர்கள், தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும், தம்மை காப்பாற்றி குடியேற்ற நாடொன்று தங்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தாங்கள் தொடர்ந்தும் அச்சத்தில் இருப்பதாகவும் தங்களை மீட்ட அதிகாரிகள் தங்களை துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாழ முடியாத சூழல் உள்ளது. எனவே அங்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த படகில் பயணம் செய்த ஒருவர் வெளியிட்டுள்ள காணொளியொன்றிலேயே குறித்த விடயங்கள் வெளியாகியுள்ளன.
Previous Post Next Post