யாழ். கல்வியங்காடு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு, சட்டநாதர் சிவன் ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கஞ்சி வழங்கும் நினைவேந்தல் நிகழ்வு, நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் தெய்வேந்திரம் கிரிதரன் தலைமையில் அப் பகுதி மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தினை முன்னிட்டு, கடந்த யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post