
இதேபகுதியைச் சேர்ந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வலி. தெற்குப் பிரதேச சபையின் 2 ஆம் வட்டார உறுப்பினராலேயே நேற்றுத் திங்கட்கிழமை(10) இரவு குறித்த தாக்குதல் நடாத்தப்பட்ட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட இளைஞன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ஏழாலை மேற்கு உதயசூரியன் சனசமூக நிலையத்திற்கு அண்மையிலுள்ள குறித்த இளைஞனின் வர்த்தக நிலையத்திற்குள் நேற்று(10) இரவு ஏழு பேர் கொண்ட குழுவொன்று உடபுகுந்துள்ளது.
இவர்களில் மேற்படி வலி. தெற்குப் பிரதேச சபை உறுப்பினரே அங்கஜன் இராமநாதனின் ஆதரவாளர் மீது தாக்குதலை மேற்கொண்டதாகவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த குறித்த இளைஞனின் நண்பன் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.