யாழில் காதலனால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 14 வயதுச் சிறுமி!

யாழ்ப்பாணத்தில் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், கெருடாவில் பகுதியில் வசிக்கும் 14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய 21 வயதான சிறுமியின் காதலனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டார்.

கெருடாவில் பகுதியை சேர்ந்த 14 வயதான சிறுமியுடன் காதல் வசப்பட்ட 21 வயதான இளைஞன், பல சமயங்களில் சிறுமியை வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதுடன், சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சிறுமி வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post