நெடுந்தீவுப் பகுதியில் ஐந்து பேரை வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களில் அவரின் புகைப்படத்துடன் குறித்த விடயங்கள் பகிரப்பட்டு வருகின்றன. அதனை நாம் இங்கு தருகின்றோம்.
இந்த ச. ரகுநாதன் எனும் நபர் இணையத்தளங்களில் குறிப்பிடப்படுவது போன்று கனடா நாட்டின் குடியுரிமை பெற்றவரல்ல . இவரது தகப்பனார் புங்குடுதீவு குறிகாட்டுவானை சேர்ந்தவர் , தாயார் குருநாகல் மாவட்டத்தினை சேர்ந்தவர். 1990 க்கு முன்பே இவர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்.
அங்கு வெள்ளையின பெண்மணியை ( அவர் ஓர் மருத்துவர் என்று கூறப்படுகின்றது ) திருமணம் செய்திருந்தபோதிலும் தகராறுகள் காரணமாக குடும்பத்தினை பிரிந்து வாழ்ந்திருக்கிறார் . கொலை வழக்கு ஒன்றில் இவன் சம்மந்தப்பட்டு பின்னர் 2018 ம் ஆண்டளவில் நாடுகடத்தப்பட்டிருந்தார்.
இவர் நேற்று காலையிலேயே புங்குடுதீவு வந்து சாதாரணமாக இருந்திருக்கிறார் . பின்னர் இரவு 7 . 30 மணியளவில் புங்குடுதீவு பெருங்காட்டிலுள்ள ஒரு வீட்டில் இவர் தங்கிநிற்பதை உறுதிப்படுத்திக் கொண்ட இளைஞர்கள் குழு ஒன்று அவ்வீட்டினை சுற்றிவளைத்ததோடு பொலிசாரை அங்கு வரவழைத்துள்ளார்கள்.
உண்மையில் அந்த வீட்டின் உரிமையாளருக்கும் (முதியவர்) நெடுந்தீவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக எதுவும் தெரிந்திருக்கவில்லை. அந்த வீட்டுக்காரர் இந்த ரகுநாதனுக்கு நெருங்கிய உறவினருமல்ல . இவரது நெருங்கிய உறவினர்கள், சகோதரர்கள் இவரோடு பெரிதாக தொடர்பு வைத்துக்கொள்வதில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இவர் புங்குடுதீவிலும் இல்லை.
கொழும்பிலும் , வவுனியாவிலும் வசித்துவந்ததாக இந்த நபர் இளைஞர்களிடம் நேற்று கூறியிருந்தார். கடந்த மாதமே இவர் புங்குடுதீவுக்கு வந்து சிலநாட்கள் நின்றுவிட்டு நெடுந்தீவிலேயே படுகொலை சம்பவம் நடைபெற்ற தருணம் வரைக்கும் தங்கியிருந்துள்ளார்.