பேராதனை மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகங்களில் தற்கொலை செய்த யாழ்.மாணவர்கள்! நடந்தது என்ன?

ஸ்ரீ ஜயவர்தனபுர மற்றும் பேராதனைப் பல்லைக்கழக பொறியியல் பீடங்களின் மாணவர்கள் நேற்றுத் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை மற்றும் வரணி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவன் நேற்று அதிகாலை பல்கலைக்கழக அக்பர் விடுதியின் மூன்றாவது மாடியில் உள்ள அறையொன்றில் உள்ள குளியலறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் நகுலராசா குகதீசன் (22) ஆவார். இவர் யாழ்ப்பாணம் வரணி மேற்கு கரம்பையில் வசிப்பலர் கடந்த வருடம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதுடன் அவர்களில் 3 பேர் பொறியியல் பீடத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்த மாணவனின் மரணத்துடன், 2023-2024 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. அவர்களில் நான்கு பேர் பொறியியல் பீடத்தைச் சேர்ந்தவர்கள்.

பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களின் பரீட்சை நேற்று (16) முடிவடைந்த நிலையில், படித்துக் கொண்டிருந்த இந்த குறிப்பிட்ட மாணவன் குகதீசன் அதிகாலை 1.30 மணியளவில் குளியலறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் தெரிவித்தார்.

இந்த மாணவனின் தாயார் பற்றுநோயால் சில காலங்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்தார். மாணவனின் சடலத்தை கையேற்பதற்காக அவரது சகோதரர் நேற்று (16) பல்கலைக்கழகத்திற்கு வந்திருந்தார்.

அந்த நேரத்தில் உயிரிழந்த மாணவர் மேலும் மூன்று மாணவர்களுடன் விடுதியில் உள்ள தனது அறையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த மாணவர்களிடமும் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நீதவானின் பரிசோதனையின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட மாணவர் ஒருவர் விடுதிக்குள் நேற்று (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஹாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நார்த்தனை வடக்கு பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் அபிநஜன் (வயது 23) என்பவர் பொரலஸ்கமுல கட்டுவாவல என்ற இடத்தில் வாடகைக்கு பெற்று வந்த மாணவர் விடுதிக்குள் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேல் தளத்தில் தங்கியிருந்த மற்றொரு மாணவர் அதிகாலை 4.30 மணியளவில் இறங்கி வந்து பார்த்தபோது, அபிநஜன் தூக்கில் தொங்கியதை கண்டு சத்தமிட்டார்.

பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் அங்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் மஹரகம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான். எச்.எம்.டக்ளஸ் ரூபசிறி அவர்கள் வருகை தந்து பரிசோதனையை மேற்கொண்டிருந்தார்.

மாணவனின் தற்கொலைக்கு பயன்படுத்திய கயிறு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டதால், அது எப்படி விடுதிக்குள் கொண்டு வரப்பட்டது என்பதை உறுதி செய்ய முடியாததால், சந்தேகம் எழுந்துள்ளது.

உயிரிழந்த மாணவனின் கையடக்கத் தொலைபேசி காணாமல் போனமை தொடர்பில் விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு தேவையான ஏனைய நடவடிக்கைகளை நீதவான் ஊடாக மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் அங்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நீதவான் விசாரணையும் நடத்த திட்டமிடப்பட்டது.

உயிரிழந்த மாணவனின் பிரேத பரிசோதனை களுபோவில் போதனா வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மஹரகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் செல்க ராஜபக்ஷவின் பணிப்புரையின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Previous Post Next Post