சுவிஸில் கணவனால் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாய்!

சுவிற்சர்லாந்தில் கணவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்கெவ் பகுதியிலுள்ள ரப்பர்ஸ்விஸ் பகுதியில் கடந்த புதன்கிழமை காலையில் இந்த கொலை சம்பவம் நடந்தது.

பெர்னர்ஸ் எஸ்வெர்க் என்ற சிற்றுண்டிச்சாலையில் பணியாற்றும் தமிழ்பெண், காலை 8.30 மணியளவில் கொல்லப்பட்டார். சிற்றுண்டிச்சாலைக்குள் கணவர் கத்தியுடன் நுழைந்து மனைவியை சரமாரியாக குத்திக் கொன்றார்.

இந்த கொலை நடந்த போது, அந்த பகுதியில் சிலர் நின்றிருந்தனர்.

சம்பவ இடத்திலேயே அந்த பெண் விழுந்து இறந்தார். பொலிசார் அங்கு வந்த போது, சந்தேகநபரான கணவர் எதிர்ப்பின்றி சரணடைந்தார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கருணாகரன் நர்மலா (47) என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்

யாழ்ப்பாணத்தை சொந்த இடமாக கொண்ட குறித்த பெண் கடந்த 25 வருடங்களாக குடும்பத்துடன் சுவிற்சர்லாந்தில் வசித்து வருகின்றார்.

கணவன், மனைவிக்கிடையில் அண்மைக்காலமாக ஏற்பட்ட முரண்பாடு இந்த விபரீதத்தில் முடிந்துள்ளது.
Previous Post Next Post