ஒருத்தர் பத்தாது! 5 பேரைத் திருமணம் செய்வேன்!! நடிகை சர்ச்சை பேச்சு!!!

தான் இன்னும் திருமணம் செய்யவில்லை. சிங்கிலாத்தான் இருக்கிறேன். அப்படித் திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டவர்களைத் திருமணம் செய்வேன் என சர்ச்சை பேச்சை பேசியுள்ளார் நடிகை ரித்திகா சிங்.

இறுதிச் சுற்றுப் படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங்.

இறுதிச்சுற்றுப் படத்தைத் தொடர்ந்தும் தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் நடித்துள்ளார். அருண் விஜய்யுடன் பாக்ஸர் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந் நிலையில் ரித்திகா சிங் இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா எனக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த ரித்திகா, தான் ஐந்துபேரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறினார். அத்துடன் உங்களை நேரில் பார்க்கும் போது நிச்சயம் உங்களையும் திருமணம் செய்வேன் என்றார்.

இவரின் இக் கருத்து சமூகவலைத்தளங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதனால் அவருக்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Previous Post Next Post