கோர விபத்து! நால்வர் உயிரிழப்பு!! (படங்கள்)

தெற்கில் இடம்பெற்ற விபத்தில் மூன்று இந்தியர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். தெற்கு அதிவேக வீதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன-கநற்துகஹஹெத்தெம்ம பகுதியிலேயே இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 3 இந்தியர்கள் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வான் ஒன்று கொள்கலன் வாகனத்துடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post