வட மாகாணத்தின் முதல் பெண் ஆளுநர் பதவியேற்பு!

வடக்கு மாகாணத்தின் முதல் பெண் ஆளுநர் இன்று காலை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி பி.எஸ்.எம்.சாள்ஸ் இன்று வட மாகாண முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை அலுவலர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதலை வழங்கியிருந்தது.

இந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக அவர் இன்று காலை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Previous Post Next Post