யாழில் அயல் வீட்டுக்குள் நுழைந்த கன்றுகுட்டி கல்லால் அடித்துக் கொலை! (படங்கள்)

தனது வீட்டு வளவுக்குள் வந்த அயல் வீட்டுக் கன்றுக் குட்டியை இளைஞன் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை அராலி மேற்கு-கோட்டைக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

33 நாட்களே நிரம்பிய பசுக்கன்றுக் குட்டி துள்ளித் திரிந்து வேலியில் இருந்த இடைவெளியால் அயல் வீட்டு வளவுக்குள் சென்றுள்ளது.

அதனைக் கண்ட அயல் வீட்டு இளைஞன் (வயது-19) கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

மிருகவதைச் சட்டத்தின் கீழ் இளைஞன் மீது நீதிமன்ற நடவடிக்கை கோரி வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறை;பாடு செய்யப்பட்டது. எனினும் பொலிஸார் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தச் சம்பவம் அப் பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. அராலி தெற்கு கோட்டைக்காடு கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயிகள். அவர்கள் தமது வாழ்வாதாரத்துக்கும் விவசாயத்துக்கும் ஆதாரமாக பசு மற்றும் எருது மாடுகளை வளர்ப்போர்.

இவ்வாறான நிலையில் அந்தக் கிராமத்தில் வசிக்கும் இளைஞன் இளம் கன்றுகுட்டியை கல்லால் அடித்துக் காலை செய்தமை கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


Previous Post Next Post