யாழ்ப்பாணத்தில் சிறையிலிருந்து வெளிவந்த இளைஞன் உயிரிழப்பு! நடந்தது என்ன?

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்லனர். இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

நாவற்குளியிலிலுள்ள வீடொன்றில் வைத்து குறித்த இளைஞர் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டதில் மரணமடைந்துள்ளார்.

அதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

விசாரணையில் உயிரிழந்த இளைஞர், போதைப்பொருள் தொடர்பாக வழக்கொன்றில் தண்டனை அனுபவித்து கடந்தவாரம் சிறையிலிருந்து வெளிவந்ததாக கூறப்படுகின்றது.
Previous Post Next Post