சுவிட்சர்லாந்தில் உயர் பதவிக்கு தெரிவான இலங்கை தமிழ் பெண்!

இலங்கையில் பிறந்த தமிழ் பெண்- சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் தேசிய கவுன்சிலின் இரண்டாவது துணைத் தலைவராக அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமி சுவிஸ் கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையில் பிறந்த நபர் ஆவார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் ரூமி கான்டன் பேரவை உறுப்பினராக கடமையாற்றி வந்த நிலையிலேயே தேசிய நாடாளுமன்றின் உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

பரா ரூமி Farah Rumy இலங்கை வம்சாவளி தமிழ் பெண் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.

இலங்கையில் பிறந்த ரூமி தனது ஆறாவது வயதில் 1998ஆம் ஆண்டு பெற்றோருடன் சுவிட்சர்லாந்தில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post