பொலிஸாரின் கைதுகளால் தீவகத்திலிருந்து பலர் தப்பியோட்டம்!

அண்மைக் காலமாக அதிகரித்து வரும் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிரான போராட்டங்களின் எதிரொலியாக பொலிஸாரின் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் மண்கும்பானில் மணல் கடத்தல் முக்கிய புள்ளி என்ற குற்ற்சாட்டில் தேடப்பட்டு வந்த ஒருவர் நேற்றுப் பொலிஸாரினால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

புளியங்கூடலைச் சேர்ந்த இவர், தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு வந்தது. எனினும் அவர் பொலிஸாரிடம் சிக்கமால் இருந்தார்.

தற்போது இவர் கைது செய்யப்பட்டு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அண்மைக் காலமாக மணல் கொள்ளையர்கள் தீவகத்தில் தனிக்காட்டு ராஜாக்களாக செயற்பட்டு வந்த நிலையில் உயர்மட்ட உத்தரவையடுத்து மணல் கடத்தல்காரர்களைப் பொலிஸார் குறிவைக்க ஆரம்பித்துள்ளனர்.

இதையடுத்து தீவக மணல் கொள்ளையர்கள் ஊரை விட்டுத் தப்பியோடி தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post