யாழில் ரவுடிகள் அட்டகாசம்! பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அந்த வீட்டிலிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

இந் நிலையில் பொலிஸார் வருவதைக் கண்டு தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சம்பவம் மானிப்பாய் - சுதுமலை வடக்கில் இன்று மதியம் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த பெறுமதியான பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியது.

அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்டிருந்தன.

இந் நிலையில் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு சிறிது தூரத்தில் மானிப்பாய் பொலிஸார் இருவரைக் கண்டதும் மோட்டார் சைக்கிள்களை வீதியில் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.Previous Post Next Post