இந்திய இராணுவத்தினருக்குள் மோதல்! ஐவர் சாவு!! மூவர் காயம்!!!

இந்தியப் படையினர் தமக்குத் தாமே துப்பாக்கியால் சுட்டு பரஸ்பரம் மோதிக் கொண்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம் இந்தோ-திபெத் எல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் முகாம் கொண்டுள்ள இந்தியப் படையினரில் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து தனது சகாக்களை சரமாரியாக சுட்டுள்ளார்.

இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்ட சிப்பாயும் சுட்டுக் கொல்லப்பட்டார் என சத்தீஸ்கர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post