யாழில் தனக்குத் தானே தீ மூட்டியவாறு ரயில் முன் பாய்ந்து தற்கொலை! (படங்கள்)

தனக்குத் தானே தீ மூட்டியவாறு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை பன்னங்கட்டிப் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரம் ராஜசீலன் (வயது-32) என்பவரே இவ்வாறு தனது உயிரை மாய்ந்துள்ளார்.

பருத்தித்துறை சந்தைக் கட்டடத் தொகுதியில் பான்சி கடையுடன் இணைந்த புடவைக் கடை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டது.

அதனால் கடையில் இருந்த சுமார் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான உடுபுடவைகள் மற்றும் பான்சி பொருட்கள் எரிந்து நாசமாகின.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறைப் பொலிஸார், அருகில் இருந்த கடையின் சிசிரிவி கமரா பதிவினை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியதில், எரிக்கப்பட்ட கடைக்கு அருகில் உள்ள மற்றொரு கடை உரிமையாளரே தீ மூட்டி தப்பிச் செல்வதனை கண்டறிந்தனர்.

அதன் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்யும் நோக்குடன் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் தலைமறைவாகியிருந்தார்.

அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியிருந்; நிலையில் தனக்குத் தானே தீ மூட்டியவாறு புகையிதம் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

Previous Post Next Post