யாழில் காணாமல் போன மூன்று சிறுவர்கள் மீட்பு! நடந்தது என்ன? (படங்கள்)

யாழ்ப்பாணம் வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் மூன்று சிறுவர்கள் காணாமல் போனதால் அங்கு பெரும் பரபரப்பும் அச்சமான நிலையும் காணப்பட்டது.

கலியுகமூர்த்தி மதுசன் (வயது-10), புஸ்பகுமார் செல்வகுமார் (வயது-10) மற்றும் மனநலம் குன்றிய தனுசன் (வயது-17) ஆகியோரே நேற்றிரவு 6.30 மணியிலிருந்து குறித்த சிறுவர்கள் காணாமல் போயிருந்தனர்.

இந்த நிலையில் ஊர் மக்கள் திரண்டு இரவோடு இரவாக சிறுவர்கள் மூவரையும் தேடினர். பருத்தித்துறைப் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டு அவர்களும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந் நிலையில் சிறுவர்கள் மூவரும் ஆலயம் ஒன்றின் மண்டபத்தில் உறக்கத்திலிருந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டனர்.


Previous Post Next Post