அரச ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி!

நாட்டின் பொருளாதாரம் அதிக்கும் பட்சத்திலேயே அரசாங்க ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்த்திருக்கும் பட்டதாரிகள் சார்பான பிரதிநிதிகள் இன்று காலை ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறிய அளவிலானோரினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் காரணமாக அரச சேவை தற்போது பாரிய விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

அன்றாடம் இடம்பெறும் தவறுகள் காரணமாக முழுமையான அரசாங்க சேவை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பொதுமக்கள் வியர்வை சிந்தி உழைக்கும் பணமே அரச ஊழியர்களுக்குச் சம்பளமாக வழங்கப்படுகின்றது. பல்வேறு திறமையான அரச சேவை ஊடாக தங்களுக்குச் சம்பளம் வழங்கும் மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டியது அரசாங்க ஊழியர்களின் பொறுப்பாகும்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் மற்றும் வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்றால் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதற்காக அரசாங்க ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Previous Post Next Post