யாழ்.சிறையிலிருந்து 17 கைதிகள் விடுதலை! (படங்கள்)

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதிகள் 17 பேர் இன்று பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண்கள் உட்பட 17 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.

இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்த 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் திருட்டு, நம்பிக்கை மோசடி மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற சிறு குற்றங்களின் காரணமாக சிறைத் தண்டனை அனுபவித்தவர்களாகும்.

வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பொரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் எவரும் இந்தப் பட்டியலில் இல்லை என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. 
Previous Post Next Post