யாழில் உள்ள பல உணவகங்களுக்கு சீல்! உணவக விபரங்கள் இணைப்பு!!

யாழ்பப்பாணத்தில் உள்ள பல உணவகங்களுக்கு இன்றைய தினம் சீல் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை யாழ்.பிரதேச செயலரின் அறிவுறுத்தலுக்கமைய யாழில் உள்ள உணவகங்கள் மீது பொதுச் சுகாதார பரிசோதகர் சஞ்சீவன் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பின்னர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆறு வழக்குகளிற்கு 2 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் தண்டத்துடன் அனைத்துக்கும் சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்புத்துறை, யாழ்.நகர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம், உணவகங்களிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் கே.கே.எஸ். வீதியில் அமைந்துள்ள ரஹ்மான் ஹோட்டல், ராசிக் முஸ்லிம் ஹோட்டல் மற்றும் கொழும்புத்துறையில் அமைந்துள்ள இன்ஷா முஸ்லிம் ஹோட்டல், தமீம் முஸ்லிம் ஹோட்டல், குமார் பேக்கரி என்பன அடங்குகின்றன.

இதில் ரஹ்மான் ஹோட்டலுக்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டதுடன், சீல் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டது.

வெதுப்பகத்திற்கு 6 குற்றச்சாட்டுக்களுக்கு 30 ஆயிரம் ரூபாவும், ஏனைய உணவகங்களுக்கு 7 குற்றச்சாட்டுகளுக்கு 35 ஆயிரம் ரூபாவும், 6 குற்றச்சாட்டுகளுக்கு 30 ஆயிரம் ரூபாவும், 5 குற்றச்சாட்டுகளுக்கு 25 ஆயிரம் ரூபாவும் என்றவாறு தண்டம் அறவிடப்பட்டதுடன், அனைத்துக்கும் சுகாதார குறைபாடுகள் சீர் செய்யும் வரை சீல் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்றைய தினம் அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.


Previous Post Next Post