விக்னேஸ்வரன் தலைமையில் யாழில் உதயமாகியது புதிய கூட்டணி! (படங்கள்)

முன்னாள் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று உதயம் பெற்றுள்ளது.

அந்த வகையில் நான்கு கட்சிகளின் கூட்டாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி உதயமாகியுள்ளது.

இந்தப் புதிய கூட்டணியில் நான்கு கட்சிகளின் தலைவர்களும் இன்று புரிந்ர்துணர்வு உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.

இந்தக் கைச்சாத்திடும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனை பொதுச் செயலாளராகக் கொண்ட தமிழ் மக்கள் கூட்டணி, சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), முன்னாள் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் மற்றும் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகிய இணைந்த கூட்டணியாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கடந்த பொதுத் தேர்தலுடன் விலியிருந்தது. அத்துடன் ஏனைய 3 கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்டவையாகும்.

பதவிக்காக நாம் வரவில்லை. மக்களுக்கு சேவையாற்றவே இந்தக் கூட்டணியை உருவாக்கியுள்ளோம் என்று கூட்டணியின் உடன்பாடு கைச்சாத்திடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்து நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 


Previous Post Next Post