மண்டைதீவில் அதிகாலை வீதிச் சோதனை! மூவர் கைது!!

மண்டைதீவுப் பகுதியில் 9 ஆயிரத்து 500 கற்றாழைகளைக் கடத்துவதற்கு முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு கற்றாழைகளை விநியோகித்த ஒருவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும் முஸ்லிம்கள்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

மண்டைதீவுச் சந்தியில் அதிகாலை 3 மணியளவில் இடம்பெற்ற வீதிச் சோதனை நடவடிக்கையின் போது 9 ஆயிரத்து 500 கற்றாளைக் கன்றுகளுடன் தம்புள்ளவைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

அவற்றை அவர்களுக்கு விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில் ஊர்காவற்றுறை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த பிறிதொரு முஸ்லிமும் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் மூவரும் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post