யாழில் வர்த்தக நிலையத்திற்குள் புகுந்த கும்பல் அடாவடி! (சிசிரிவி காட்சிகள்)

யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று அங்குள்ள பொருட்களை அடித்துச் சேதப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

தப்பிச் செல்லும் போது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றையும் அடித்துச் சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்றது என பொலிஸார் தெரிவித்தனர்.

2 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. முழுமையாக தலைக்கவசம் அணிந்திருந்த அவர்கள் கடைக்குள் புகுந்து பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளது.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள்களுக்கு இலக்கத் தகடுகள் இல்லை. இச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post