யாழ்.போதனா வைத்தியசாலை கிளினிக்குக்குச் செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாதாந்த கிளினிக்குக்குச் செல்பவர்களைத் திட்டமிட்டு ஏமாற்றி கொள்ளையிட்ட இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளை ஏமாற்றி பணம், நகை போன்றவற்றைக் கொள்ளையிட்டமை தெரியவந்துள்ளது.

மாதாந்தக் கிளினிக்குக்குத் தானும் வருவதைப் போல, போலியான ஆவணங்களைத் தயாரித்து வைத்தியசாலைக்குள் காத்திருந்து கொள்ளையடித்து வந்துள்ளார்.

யாழ்.திருநகர்ப் பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய இளைஞனே இவ்வாறு மடக்கிப் பிடிக்கப்பட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தானே தயாரித்த போலி கிளினிக் ஆவணங்களுடன் அதிகாலையிலேயே வைத்தியசாலைக்கு வரும் இந்த பலே திருடன், வரிசையில் காத்திருப்பான்.

அப்போது தனிமையில் வரும் முதியவர்களுக்கு உதவுவதுபோலவும், ஏமாளிகளை அடையாளம் கண்டும் கைவரிசை காட்டி வந்துள்ளான்.

இதேபோல் நேற்றும் தனது கைவரிசையைக் காட்ட முற்பட்டபோது, அவனை அடையாளம் கண்டு வழங்கிய தகவலையடுத்து மடக்கிப் பிடிக்கப்பட்டு, யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.

எனவே யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சிசிக்சசைக்காக செல்லும் முதியவர்கள் இவ்வாறானவர்களிடம் மிகவும் கவனமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post