இலங்கையில் 7 பேருக்கு கொரோனா! உறுதிப்படுத்தியது சுகாதார அமைச்சு!!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதாக மேலும் இருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று மாலை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இத்தாலியிலிருந்து நாடு திரும்பிய 43 மற்றும் 44 வயதுடையவர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

7 பேரில் 6 பேர் இத்தாலியிலிருந்து நாடு திரும்பியவர்கள் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post