தனியார் வகுப்பு நடாத்திய ஆசியர் கைது!

கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் அனைத்துப் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

இந் நிலையில் காரைதீவுப் பிரதேசத்தில் தனியார் வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த உத்தரைவை மீறி பிரத்தியேக வகுப்புகளை நடத்திய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியா் வகுப்பு நடாத்துவதை அறிந்த பொதுமக்கள் பிரதேச சபைத் தவிசாளரிடம் முறையிட்டுள்ளனர்.

தவிசாளா், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்ததையடுத்தே குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Previous Post Next Post