தூக்கி எறியப்படும் ஜனாதிபதியின் உத்தரவுகள்! மக்களே அவதானம்!! (படங்கள்)

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக ஜனாதிபதியினால் அரச திணைக்களங்களுக்கு பல்வேறுப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுவிடுமுறைகளும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதாவது, மார்ச் 16 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 15 ஆம் திகதி வரையான காலத்தில் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்கள் கால எல்லை ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலாவதியான வாகன வரி மற்றும் இன்சூரன்ஸ் போன்றவற்றின் கால எல்லையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க பருப்பு ஒரு கிலோ 65 ரூபாயாகவும்  ரின் மீன் ஒன்று 100 ரூபாயாகவும் குறைக்கப்பட்டிருந்நது.

இந் நிலையில் இவ்வாறான ஜனாதிபதியின் உத்தரவுகள் பொலிஸ் தரப்பாலும், பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்படாமல் உதாசீனம் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந் நிலையில் ஜனாதிபதியின் உத்தரவு தொடர்பில் தெரிவித்தபோது, இது தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post