பொது விடுமுறையை ஒரு வாரம் நீடிக்கக் கோரிக்கை!

நாட்டில் பொதுவிடுமுறையை ஒரு வார காலத்துக்கு நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

நாட்டில் இன்று மார்ச் 16 ஆம் திகதி திங்கட்கிழமை அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை ஒரு வாரத்திற்கு நீடிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கேட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்பான மதிப்பாய்வு செய்யும் வரை இந்த பொது விடுமுறையை நீடிக்குமாறு சங்கம் சுட்டிகாட்டியுள்ளது.Previous Post Next Post