ஊரடங்கு வேளை யாழில் வயோதிபர்கள் மீது கோடாரியால் கொத்தி 10 பவுண் கொள்ளை!

(இரண்டாம் இணைப்பு)
யாழ்.சாவகச்சோி- மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று அதிகாலை நுழைந்த கொள்ளையா்கள் வீட்டில் தனித்திருந்த வயோதிப தம்பதியை தாக்கி படுகாயப்படுத்திவிட்டு நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனா்.

அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடா்பாக மேலும் தெரியவருவதாவது,

 மீசாலை சோலையம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள குறித்த வீட்டுக்குள் நுழைவதற்காக வீட்டின் முன் பகுதி வழியாக கூரையை பிரித்து நுழைய முயற்சித்துள்ளனா்.

எனினும் நுழைய முடியாத நிலையில், சமயலறை புகைகூண்டை உடைத்து உள்நுழைய முயற்சித்துள்ளனா். அதுவும் முடியாமல்போன நிலையில், வீட்டுக்கு பின்னால் இருந்த ஏணியின் மூலம் எறி கூரையை பிரித்து உள்நுழைந்துள்ளனர்.

வீட்டிலிருந்த வயதான தம்பதியை கோடரியால் தாக்கிய கொள்ளையா்கள் 15 ஆயிரம் ரூபாய் பணம், மோதிரம், சங்கலி, தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனா்.

இந்நிலையில் படுகாயமடைந்த வயோதிப தம்பதியை அயவலா்கள் மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனா்.

சம்பவம் தொடா்பாக சாவகச்சேரி பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

(முதலாம் இணைப்பு)
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது வயோதிபத் தம்பதிகளின் வீடு புகுந்த திருடர்கள், அவர்களைக் கோடாரியால் கொத்தித் தாக்கி நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்ற சம்பவம் இன்று (10) அதிகாலை யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரியில் இன்று அதிகாலை வீடு புகுந்த திருடர்கள், சுமார் ஒரு மணித்தியாலம் வரை வீட்டில் தங்கியிருந்து நகைகளைக் கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளனர்.

சாவகச்சேரி சோலையம்மன் கோவில் வீதியில் உள்ள வயோதிபத் தம்பதியினர் வசித்த வீடொன்றுக்குள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் முகமூடித் திருடர்கள் நுழைந்துள்ளனர்.

வெளியில் திருடர்கள் சிலர் காவலுக்கு நிற்க இருவர் ஏணி வழியாக வீட்டுக்குள் குதித்துள்ளனர். தங்க நகைகள் எங்கே வைத்திருக்கின்றீர்கள் எனக் கேட்டு வயோதிபத் தம்பதியினரை சித்திரவதையும் செய்துள்ளனர்.

சுமார் ஒரு மணித்தியாலம் அவர்கள் வீட்டில் தங்கியிருந்து சல்லடையிட்டுத் தேடுதல் நடத்தினர். இதன்போது கோடாரியால் குடும்பத் தலைவரின் தலையில் கொத்தியதுடன், அவரது கையையும் அடித்து முறித்துள்ளனர். அவரது மனைவியையும் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளனர். வீட்டிலிருந்த பத்து பவுண் நகையைக் கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

அதிகாலை 2.30 மணிக்குப் பின்னரே நோயாளர் காவு வண்டிக்கு அறிவித்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். படுகாயமடைந்திருந்த முதியவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.








Previous Post Next Post